சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! தள்ளிப் போகும் “குட் பேட் அக்லி” ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்…!!! Sowmiya Balu29 August 2024097 views நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி ”. இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாவது கடினம் என கூறப்படுகிறது. இதற்கு பதிலாக 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிலீசாகும் என இணையத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் இது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.