சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! “கோட்” படத்தில் மோகன்லால்? வைரலாகும் புகைப்படங்கள்…!!! Sowmiya Balu31 August 2024082 views இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ”கோட்”. செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு பிரபல மலையாள நடிகரான மோகன்லாலை சந்தித்துள்ளார். இதனால் கோட் படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இருவரும் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.-