சினிமா செய்திகள் தமிழ் சினிமா அடடே! இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அதிதி… அவரே கூறிய லேட்டஸ்ட் அப்டேட்…!!! Sowmiya Balu15 July 20240103 views சங்கர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த திரைப்படம் இதுவரை உலக அளவில் 130 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து இந்தியன் 3, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘உங்களுடைய இயக்கத்தில் அதிதி சங்கரை எப்போது பார்க்கலாம்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சங்கர், ‘கண்டிப்பாக பார்க்கலாம். அவருக்கென்று ஒரு முக்கிய கதாபாத்திரம் தயாராக உள்ளது. அதிதியிடம் நடிகைக்கான சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என ஒரு தந்தையாக இல்லாமல் இயக்குனராக கண்டுபிடித்தேன்’ எனவும் கூறியுள்ளார்.