சினிமா செய்திகள் செய்திகள் டிவி சீரியல் அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu20 September 20240129 views விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற ”ராஜா ராணி” சீரியலில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இதை தொடர்ந்து இவர் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். இந்த தொடரில் பாதியில் இருந்து விலகினார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இறுதி கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த சீரியல் நிறைவடைய இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது .