நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இதுவரை இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பரம்பொருள், பொன்னியின் செல்வன், போர்த் தொழில் போன்ற திரைப்படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். கடந்த வருடமே இயக்குனர் ஷியாம் பர்வீன் இயக்கத்தில் ”தி ஸ்மைல் மேன்” என்ற தனது 150வது படத்தில் ஒப்பந்தம் ஆகினார்.

இந்த படத்தில் இவர் அல்சைமர் நோய்க்கு பாதிக்கப்பட்ட ரிட்டயர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இனியா, ஜார்ஜ் மரியான், சிஜா ரோஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் டீசர் ரிலீசாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.